முக்கிய செய்திகள்:
கிருஷ்ணகிரி: தனியார் நிறுவன ஊழியர்கள் இருவரை தாக்கி, 16 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த 8 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் நிறுவன ஊழியர்கள் இருவரை தாக்கி, 16 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த 8 பேரை கைது செய்துள்ள போலீசார், 11 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.

ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் திரு. சீனிவாசன், திரு. முனியப்பன் ஆகிய இருவரும், உதிரிபாகங்கள் விற்பனை செய்ததன் மூலம் வசூலான பணத்தை, உரிமையாளரிடம் வழங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, சிப்காட் அவுசிங் காலனியில், இருவரையும் வழிமறித்த மர்ம நபர்கள், கத்தியால் தாக்கி 16 லட்சம் ரூபாயை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், அதே நிறுவனத்தில் பணிபுரியும் முருகன் மற்றும் அவரது நண்பர்கள் மஞ்சுநாத், ராமமூர்த்தி, ரவி, கோவிந்தராஜ், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த தியாகு, ராமநாதபுரத்தைச் சேர்ந்த பாபு, சரவணன் ஆகிய 8 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 11 லட்சம் ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்