முக்கிய செய்திகள்:
அமைதியாக முடிந்தது ஏற்காடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு - 86 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாகத் தகவல்

ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதியில் இன்று வாக்குப்பதிவு மிக அமைதியாக நடந்து முடிந்தது. மொத்தம் 86 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு, சேலம் தனியார் பலிடெக்னிக் கல்லூரிக்கு, பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுகின்றன. வருகிற 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

ஏற்காடு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திருமதி P.சரோஜா உள்பட 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்கான வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது. மொத்தம் உள்ள 290 வாக்குச்சாவடிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. வருகிற 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்