Deprecated: mysql_connect(): The mysql extension is deprecated and will be removed in the future: use mysqli or PDO instead in /home/content/55/10886855/html/makkalkattalai/tamizhagatimes/adminpanel/inc/config.php on line 12
தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றி முதலமைச்சர் ஜெயலலிதா சாதனை - இந்தியாவில் உள்ள மற்ற தலைவர்களை விட, பிரதமர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் முதலமைச்சர் ஜெயலலிதாதான் என The Economic Times நாளேடு கருத்து - Tamizhaga Times
முக்கிய செய்திகள்:
தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றி முதலமைச்சர் ஜெயலலிதா சாதனை - இந்தியாவில் உள்ள மற்ற தலைவர்களை விட, பிரதமர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் முதலமைச்சர் ஜெயலலிதாதான் என The Economic Times நாளேடு கருத்து

இந்தியாவில் எந்த மாநில அரசும் சாதிக்காத வகையில், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுத்தது, என்.எல்.சி. நிறுவனப் பங்குகள் தனியாருக்கு விற்பனை செய்யப்படுவதை தடுத்து, அதனை தமிழக அரசு பொதுத்துறை நிறுவனங்கள் வாங்க நடவடிக்கை மேற்கொண்டது, உலகமே வியந்துபார்த்த உலக சதுரங்க வாகையர் போட்டி-2013-ஐ வெற்றிகரமாக தமிழகத்தில் நடத்தியது, தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியது, பல்வேறு துறைகளில் தமிழகத்தை நாட்டிற்கே முன்னோடி மாநிலமாக மாற்றியது என எண்ணற்ற சாதனைகள் படைத்து வரும் முதலமைச்சர் ஜெயலலிதா, இந்தியாவின் பிரதமர் பதவியை ஏற்க அனைத்துத் தகுதிகளையும் பெற்றுள்ளார் என பிரபல ஆங்கில வணிக நாளிதழான The Economic Times பெருமைப்படுத்தியுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் ஊழல் என எண்ணற்ற இமாலய ஊழல்களின் உறைவிடமாக மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு திகழ்ந்து வருகிறது. தி.மு.க. போன்ற ஊழல் கட்சிகளுடன் இணைந்து நடைபெற்று வரும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில், பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். காங்கிரஸ் கூட்டணி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை காரணமாக பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்து, அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு அதிகரித்து வருகிறது. இதுபோன்ற பல சுமைகளை ஏழை-எளிய-நடுத்தர மக்கள் மீது ஏற்றிவரும் மத்திய அரசை, ஆட்சிக்கட்டிலில் இருந்து தூக்கி எறிய தயாராகி வருகின்றனர் பொதுமக்கள்.

பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரை, நரேந்திர மோதியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது என்றாலும், குஜராத் கலவர சர்சையில் மோதி சிக்கியுள்ளதால், அக்கட்சி, மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு வெற்றிபெறுமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

2014 நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க, இவ்விருகட்சிகளும் தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில், தேசிய அளவில் மாற்று சக்தியாக உருவெடுக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் மாநில கட்சிகளிடம் மட்டுமே உள்ளது என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருக்கிறது. அதேநேரத்தில், பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீட்டு, அந்நிய சக்திகளின் ஊடுருவலைத் தடுத்து, தீவிரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி, நாட்டை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல, நிர்வாகத்திறனும் துணிச்சலும் கொண்ட ஒரே தலைவர் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மட்டுமே என The Economic Times உள்ளிட்ட பல்வேறு ஆங்கில நாளிதழ்கள் தொடர்ந்து எழுதி வருகின்றன.

இந்தியாவின் பெரிய மாநிலங்களான உத்தரப்பிரதேசம், பீஹார், மேற்குவங்கம், தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிஷா போன்றவற்றில் காங்கிரசும், பாரதிய ஜனதாவும் அமைப்பு ரீதியாக வலுவான கட்சிகள் இல்லை - எனினும், நாடாளுமன்றத்தில் 250-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கொண்ட இந்த மாநிலங்களின் தேர்தல் முடிவையே இந்த இரு தேசிய கட்சிகளும் நம்பியுள்ளன - ஆகவே இந்த மாநிலங்களில் உள்ள கட்சிகளின் தலைவர்களில் ஒருவரே, அடுத்த பிரதமர் ஆவதற்கு வாய்ப்பு உள்ளது - இந்த பின்னணியில், தற்போதுள்ள அரசியல் சூழலில், நாட்டிற்குத் தலைமை தாங்க, திறமையும், அரசியலில் நீண்டகால அனுபவமும் கொண்ட தலைவர்கள் என்று பார்த்தால், தென்கோடி இந்தியாவில், உலகத்திற்கே கலங்கரை விளக்கமாகத் திகழும் முதலமைச்சர் . ஜெயலலிதாவை மட்டுமே குறிப்பிட்டுச் சொல்லமுடியும்.

ஓயாத உழைப்பு, மக்கள் நலனில் அவர் கொண்ட அக்கறை, தொண்டர்களை அரவணைத்துச் செல்லும் பாங்கு, தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றிக்காட்டிய திறமை, ஏழை-எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மகத்தான மக்கள்நலத் திட்டங்கள், தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக்க முதலமைச்சர் ஜெயலலிதா எடுத்து வரும் எண்ணற்ற நடவடிக்கைகள் என ஒவ்வொன்றும், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, நாட்டின் பிரதமராவதற்கு மிகத் தகுதியானவர் என்பதையே பறைசாற்றுகின்றன - அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலரி கிளிண்டன் முதல், ஜப்பான், தென்கொரியா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ் போன்ற பல்வேறு நாடுகளின் தூதர்களும், முதலமைச்சர் . ஜெயலலிதாவை அடிக்கடி சந்தித்து வருவதும், அவர், பிரதமராவதற்கு முழுத் தகுதியையும் பெற்றுள்ளார் என்பதையே காட்டுகிறது என The Economics times நாளேடு சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற்று, தனிப்பெரும் தலைவராக டெல்லிக்கு செல்லும் முதலமைச்சர் . ஜெயலலிதா, பிற மாநிலக் கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து, பொறுப்புகளைப் பிரித்துக் கொண்டு, மக்களிடையே பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்தி, மத்தியில் ஒரு நல்லாட்சியை ஏற்படுத்தித் தருவார் என்று அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். தொண்டர்கள் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் உள்ள அரசியல் நோக்கர்களும், பத்திரிகையாளர்களும் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் மட்டுமே இதனை சாதிக்க முடியும் என்றும் கூறுகின்றனர்.

ஒடிஷா முதலமைச்சர் திரு. நவீன் பட்நாயக், தெலுங்குதேசம் கட்சித் தலைவர் திரு. சந்திரபாபு நாயுடு போன்ற முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களும், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் ஆவதையே விரும்புகின்றனர். ஊழல் ஆட்சி புரிந்துவரும் காங்கிரஸ் கூட்டணி, மதச்சார்புள்ள பாரதிய ஜனதா போன்ற கட்சிகளுக்கு மாற்றாக ஒரு புதிய இயக்கத்தை உருவாக்க இடதுசாரிக் கட்சிகளும் தொடர்ந்து முயன்று வருவதால், அவர்களது ஆதரவும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கே என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.

தவறான பொருளாதாரக் கொள்கை, அதிகரித்து வரும் பணவீக்கம், விலைவாசி உயர்வு, இமாலய ஊழல்கள் என இக்கட்டான சூழ்நிலையில் சிக்கித் தவிக்கும் இந்திய நாட்டை மீட்கும் துணிச்சலும், தனித்திறமையும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மட்டுமே உண்டு என The Economics times நாளேடு புகழாரம் சூட்டியுள்ளது.

காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாவுக்கு மாற்றாக, மக்கள் தேடிக்கொண்டிருக்கும் ஒரு தனிப்பெரும் தலைவராக, பிரதமராக முதலமைச்சர் ஜெயலலிதா உருவெடுப்பார் - இந்தியாவின் விடிவெள்ளியாக முதலமைச்சர் ஜெயலலிதா விளங்குவார் என்பதே நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் செய்திகள்