முக்கிய செய்திகள்:
மலேசியாவில் இருந்து 7 கிலோ தங்கக் கட்டிகளை கடத்தி வந்த நபர் சென்னை விமான நிலையத்தில் கைது : இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

மலேசியாவில் இருந்து 7 கிலோ தங்கக் கட்டிகளை மறைத்து சென்னைக்கு எடுத்து வந்த நபர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

மலேசியாவைச் சேர்ந்த குமார்சின்னையா என்பவர், தனியார் விமானம் மூலம், இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இறங்கினார். அப்போது, அவருடைய சூட்கேஸை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டபோது, மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கக்கட்டிகளை கைப்பற்றினர். 7 கிலோ எடையுள்ள இந்த தங்கத்தின் மதிப்பு சுமார் இரண்டரை கோடி ரூபாயாகும். இதற்கான உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க தவறியதால் குமார்சின்னையா கைது செய்யப்பட்டார். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்