முக்கிய செய்திகள்:
சென்னையில் வாடகைக்கு குடியிருப்பவர்கள் பற்றிய விவரங்களை, வீட்டு உரிமையாளர்கள் காவல் நிலையங்களில் தெரிவிக்க வேண்டும் : காவல்துறை ஆணையர் வேண்டுகோள்

சென்னை பெருநகரில் வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் குறித்த விவரங்களை அருகில் உள்ள காவல் நிலையங்களில் சமர்ப்பிக்குமாறு காவல்துறை ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமூக விரோதிகள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னையில் குற்ற நிகழ்வுகளைத் தடுக்கவும், பொது அமைதியை ஏற்படுத்தவும், பெருநகர போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், வாடகைதாரர்கள் என்ற போர்வையில் தங்கியுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், சென்னை பெருநகர காவல்துறையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் அனைத்து வீட்டு உரிமையாளர்களும் தங்கள் வீடுகளில் குடியிருக்கும் வாடகைதாரர்கள் குறித்த விவரங்களை அருகாமையில் உள்ள காவல் நிலையங்களில் சமர்ப்பிக்கும்படி பெருநகர காவல்துறை ஆணையர் திரு. ஜார்ஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல், 60 நாட்களுக்குள் வரையறுக்கப்பட்ட படிவங்களில் வாடகைதாரர்கள் குறித்த விவரங்களை சமர்ப்பிக்க ​வீட்டு உரிமையாளர்களை போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்