முக்கிய செய்திகள்:
சார்பதிவாளர், இணை வணிகவரி அலுவலர் உள்ளிட்ட ஆயிரத்து 64 பணியிடங்களுக்கு வரும் ஒன்றாம் தேதி தேர்வு : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்னேற்பாடு

தமிழகம் முழுவதும், சார்பதிவாளர், துணை வணிகவரி அலுவலர், துணை ஆய்வாளர் உள்ளிட்ட ஆயிரத்து 64 பணியிடங்களுக்கு 6 லட்சத்து 64 ஆயிரத்து 583 பேர் வரும் ஒன்றாம் தேதி தேர்வு எழுதவுள்ளனர். இதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 முதல் நிலைத் தேர்வு, வரும் ஒன்றாம் தேதி நடைபெறவுள்ளது. இதில், சார்பதிவாளர் நிலை இரண்டு, துணை வணிகவரி அலுவலர், துணை ஆய்வாளர், கணக்கு தணிக்கையாளர், வருவாய் உதவியாளர், கைத்தறி ஆய்வாளர் உள்ளிட்ட ஆயிரத்து 64 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இத்தேர்வினை 6 லட்சத்து 64,583 பேர் எழுதவுள்ளனர். இந்தத் தேர்வு 114 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள 2 ஆயிரத்து 269 மையங்களில் நடைபெறவுள்ளன. சென்னையைப் பொருத்த வரை 263 மையங்களில் 79,550 பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு ஆயத்த பணிகள் குறித்த மாவட்ட நிர்வாகங்களுடன் காணொலி காட்சி மூலம் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்