முக்கிய செய்திகள்:
ஏற்காடு இடைத்தேர்தலில், அடையாள அட்டையில் மாற்றம் இருந்தால், ஓட்டுநர் உரிமம், வங்கி பாஸ்புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களைக் காட்டி வாக்களிக்கலாம் - தேர்தல் ஆணையம் தகவல்

ஏற்காடு இடைத்தேர்தலில், வாக்காளர் அடையாள அட்டையில் புகைப்படம் மாறியிருந்தால், பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வங்கி பாஸ்புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஏற்காடு சட்டமன்றத் தொகுதியில் வரும் 4-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்காளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட, புகைப்படத்துடன் கூடிய​தேர்தல் அடையாள அட்டையை கொண்டுவரத் தவறினால், அதற்கு பதிலாக அங்கீகரிக்கப்பட்ட, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள சீட்டை கொண்டுவரவேண்டும் - இத்தகைய வாக்காளர் அடையாள சீட்டுகள் தேர்தல் நடைபெறும் தினத்திற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பாக வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படும் - ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தேர்தல் நடத்தும் அலுவலரால் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரியிடம் அடையாள சீட்டுகளின் நகல்கள் வழங்கப்படும் - அடையாள சீட்டுகளை கொண்டுவராத வாக்காளர்கள், வாக்குச்சாவடிக்கு முன்பாக உள்ள இந்த அதிகாரியிடம் இருந்து நகல் சீட்டை பெற்றுக்கொள்ளலாம்.

தேர்தல் அடையாள அட்டையில் உள்ள புகைப்படம் மாறியிருந்தால், அதற்கு பதில் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், மத்திய-மாநில அரசு ஊழியர்களுக்கான புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கும் அடையாள அட்டை, வங்கி அல்லது தபால்நிலையத்தின் புகைப்படத்துடன் கூடிய பாஸ் புத்தகம், Pan கார்டு, ஆதார் அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம் இவற்றில் ஒன்றை காண்பித்து அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்- எனினும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாவிட்டால், அடையாள அட்டை இருந்தாலும் வாக்களிக்க இயலாது என தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்