முக்கிய செய்திகள்:
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் பலதுறை உயர் சிறப்பு மருத்துவமனை பணிகள் குறித்து ஆய்வு - முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் ஆலோசனை

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் பலதுறை உயர் சிறப்பு மருத்துவமனை பணிகளின் முன்னேற்றம் குறித்து, முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் பலதுறை உயர் சிறப்பு மருத்துவமனை பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் திருமதி. ஷீலா பாலகிருஷ்ணன், நிதித்துறை முதன்மைச் செயலாளர் திரு. கே. சண்முகம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், பொதுப் பணித்துறைச் செயலாளர் திரு. எம். சாய்குமார், பலதுறை உயர் சிறப்பு மருத்துவமனையின் தமிழ்நாடு அரசின் சிறப்புப் பணி அலுவலரும், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் திட்ட இயக்குநருமான திரு. டி. விவேகானந்தன், தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் நிர்வாக இயக்குநர் திரு. ராஜேந்திர ரத்னூ, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் மருத்துவர் து. சாந்தாராம், தலைமை பொறியாளர் திரு. ஆர். கோபால கிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்