முக்கிய செய்திகள்:
ஏற்காடு தொகுதியில் முதலமைச்சர் ஜெயலலிதா வரும் 28-ம் தேதி பிரச்சாரம் - 9 இடங்களில் பொதுக்கூட்டங்களில் உரையாற்றி, வாக்கு சேகரிக்கிறார்

ஏற்காடு சட்டமன்றத் தொகுதி​இடைத்தேர்தல் வரும் 4-ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இத்தொகுதியில், வரும் 28-ம் தேதி பல்வேறு இடங்களில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கிறார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதா, ஏற்காடு தொகுதியில் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திருமதி.P.சரோஜாவை ஆதரித்து, வரும் 28-ம் தேதி பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கிறார்.

அன்றைய தினம் காரிப்பட்டி, கருமாபுரம், மேட்டுப்பட்டி, எம்.பெருமாபாளையம், டோல்கேட் வழியே செல்லும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, மின்னாம்பள்ளியில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகிறார்.

பின்னர், காட்டுவேப்பிலைப்பட்டி, முத்தம்பட்டி, வாழப்பாடி பிரிவு வழியே சென்று வெள்ளாளகுண்டம் பிரிவு என்ற இடத்தில் உரையாற்றுகிறார்.

இதனைத்தொடர்ந்து, பேளூர் சாலை பிரிவு, துக்கியாம்பாளையம், அத்தனூர்பட்டி வழியே சென்று வாழப்பாடி பேருந்து நிலையத்தில் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பேசவுள்ளார்.

இதயைடுத்து, பள்ளத்தாதனூர், நடுப்பட்டி வழியே சென்று பேளூர்-கருமந்துறை பிரிவு ரோடு, எம்.ஜி.ஆர். சிலை அருகில் பிரச்சாரக் கூட்டத்தில் உரை நிகழ்த்துகிறார்.

மேலும், ராஜாபட்டினம், பூசாரிப்பட்டி, அனுப்பூர் பிரிவு ஆகிய இடங்கள் வழியே செல்லும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நீர்முள்ளிக்குட்டை என்ற இடத்தில் பேசுகிறார்.

இதனைத்தொடர்ந்து, சர்க்கார்நாட்டார் மங்கலம், A.N.மங்கலம், செல்லியம்பாளையம், குள்ளம்பட்டி பிரிவு ஆகிய இடங்கள் வழியே சென்று கூட்டாத்துப்பட்டியில் உரை நிகழ்த்துகிறார்.

பின்னர், ராமர்கோவில் வழியாக சென்று வலசையூர், அயோத்தியாபட்டினம், உடையாப்பட்டி ஆகிய இடங்களில் பொதுக் கூட்டங்களில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பிரச்சாரம் செய்யவிருக்கிறார் என அ.இ.அ.தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்