முக்கிய செய்திகள்:
சென்னையிலிருந்து அந்தமானுக்கு சென்ற தனியார் விமானத்தில் எந்திரக் கோளாறு : விமானியின் சமயோசித நடவடிக்கையால், 140 பயணிகள் உயிர் தப்பினர்

சென்னையில் இருந்து 140 பயணிகளுடன் அந்தமானுக்கு புறப்பட்டுச் சென்ற தனியார் விமானம் வானில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென அதில் எந்திரக்கோளாறு ஏற்பட்டது. அதனை சரியான சமயத்தில் கண்டறிந்த விமானியின் சமயோசித நடவடிக்கையால், பயணிகள் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர்.

சென்னை விமான நிலையத்தில், இன்று காலை 7.45 மணியளவில் தனியார் விமானம் ஒன்று அந்தமானுக்கு புறப்பட்டுச் சென்றது. அடுத்த அரைமணி நேரத்தில், ஆந்திரா மாநிலத்தில் வானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென எந்திரக் கோளாறு ஏற்பட்டது. அதனை உடனடியாக கண்டறிந்த விமானி, கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டு, சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி பெற்றார். அதனையடுத்து, 140 பயணிகளும் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர். எந்திரக்கோளாறு சரிசெய்யப்பட்டதும், விமானம் மீண்டும் அந்தமானுக்கு கிளம்பிச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்