முக்கிய செய்திகள்:
5 லட்சம் எண்ணிக்கையிலான விலையில்லாக் கொசுவலைகள் வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

முதலமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இன்று, ஏழை எளிய மக்களுக்கு விலையில்லா கொசுவலைகள் வழங்கும் திட்டத்தைத் துவக்கி வைக்கும் அடையாளமாக 4 நபர்களுக்கு கொசுவலைகளை வழங்கினார். 5 லட்சம் எண்ணிக்கையிலான விலையில்லாக் கொசுவலைகள் வழங்கும் திட்டத்தின் முதற்கட்டமாக, 1 கோடியே 32 லட்சத்து 13 ஆயிரத்து 96 ரூபாய் செலவில் 78 ஆயிரத்து 184 கொசு வலைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னை அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய் போன்ற நீர்வழித்தடங்களின் கரைகள் அவைகளையொட்டிய சாலையோரம் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு கொசுத்தொல்லையினைத் தவிர்க்கவும், கொசுக்களால் பரவும் நோய்களான மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்கவும், ஐந்து லட்சம் எண்ணிக்கையிலான விலையில்லாக் கொசுவலைகள் வழங்கும் திட்டத்தின் முதற்கட்டமாக 1 கோடியே 32 லட்சத்து 13 ஆயிரத்து 96 ரூபாய் செலவில் 78 ஆயிரத்து 184 கொசு வலைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சர் ஜெயலலிதா, ஏழை எளிய மக்களுக்கு விலையில்லா கொசுவலைகள் வழங்கும் திட்டத்தைத் துவக்கி வைக்கும் அடையாளமாக 4 நபர்களுக்கு கொசுவலைகளை இன்று வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் திரு கே.பி.முனுசாமி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், சென்னை மாநகராட்சி மேயர் திரு சைதை சா.துரைசாமி, தலைமைச் செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர் திரு கே.பணீந்திர ரெட்டி, சென்னை மாநகராட்சி ஆணையர் திரு விக்ரம் கபூர், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்