முக்கிய செய்திகள்:
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டம் மேலும் தீவிரமடைகிறது : சென்னைக்கும், ஓங்கோலுக்கும் இடையே நாளை இரவு கரையைக்கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

மத்திய வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து, நாளை இரவு, சென்னைக்கும் ஓங்கோலுக்கும் இடையே கரையைக் கடக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது, மேற்கு நோக்கி நகர்ந்து, சென்னைக்கு கிழக்கு மற்றும் வடகிழக்கே 500 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேலும் வலுவடைந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, தெற்கு ஆந்திராவுக்கும், வடதமிழ்நாட்டுக்கும், குறிப்பாக சென்னைக்கும், ஓங்கோலுக்கும் இடையே நாளை இரவு கரையைக் கடக்கக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, தமிழ்நாட்டில் அநேக இடங்களில் இன்று இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்