Deprecated: mysql_connect(): The mysql extension is deprecated and will be removed in the future: use mysqli or PDO instead in /home/content/55/10886855/html/makkalkattalai/tamizhagatimes/adminpanel/inc/config.php on line 12
திருப்பூர் மாநகர மக்கள் தொகையை கருத்தில் கொண்டு புதிய காவல்துறை ஆணையர் அலுவலகம் - முதலமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில், காணொலிக் காட்சி மூலமாகத் துவக்கி வைத்தார் - Tamizhaga Times
முக்கிய செய்திகள்:
திருப்பூர் மாநகர மக்கள் தொகையை கருத்தில் கொண்டு புதிய காவல்துறை ஆணையர் அலுவலகம் - முதலமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில், காணொலிக் காட்சி மூலமாகத் துவக்கி வைத்தார்

புதிதாக தோற்றுவிக்கப்பட்ட திருப்பூர் மாநகரக் காவல் ஆணையரகத்தை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாகத் துவக்கி வைத்தார்.

திருப்பூர் மாநகரத்தில் மக்கள்தொகை பெருக்கத்தினால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் தொழிலாளர்கள் இடப்பெயர்வால் ஏற்படும் பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு திருப்பூர் மாநகரத்திற்கு தனியாக ஒரு காவல் துறை ஆணையர் அலுவலகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பிற்கேற்ப, திருப்பூர் மாநகரத்திற்கு புதிய காவல் துறை ஆணையர் அலுவலகம் அமைத்திடும் வகையில், 536 பணியிடங்களை உருவாக்கிட 17 கோடியே 29 லட்சத்து 79 ஆயிரம் ரூபாயும், அலுவலகப் பயன்பாட்டிற்கான உபகரணங்களுக்கு 19 லட்சத்து 18 ஆயிரம் ரூபாயும் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டார்.

புதிதாக உருவாக்கப்படும் திருப்பூர் மாநகரக் காவல் ஆணையரகமானது, அனுப்பர்பாளையம், வேலம்பாளையம், வீரபாண்டி, ஊத்துக்குளி, அனுப்பர்பாளையம் போக்குவரத்து, திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் மத்திய காவல் நிலையம் ஆகிய காவல் நிலையங்களின் எல்லைகளை உள்ளடக்கி மொத்தம் 7 காவல்நிலையங்கள், 3 போக்குவரத்து காவல் நிலையங்கள், 2 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் மற்றும் ஒரு மத்திய குற்றப்பிரிவு ஆகியவை புதிய ஆணையரகத்தின் கீழ் செயல்படும்.

புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட திருப்பூர் மாநகரக் காவல் ஆணையரகத்தை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைத்தார். முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் இன்று தலைமைச் செயலகத்தில், 2011-2012 மற்றும் 2012-2013-ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் பங்கு ஈவுத் தொகை 1 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு.அனூப் ஜெய்ஸ்வால் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், அரசு தலைமைச் செயலாளர் திருமதி. ஷீலா பாலகிருஷ்ணன், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர். நிரஞ்சன் மார்டி, காவல் துறை தலைமை இயக்குநர் திரு.கே. ராமானுஜம், காவல்துறை குற்றப்பிரிவு தலைமை இயக்குநர் திரு.நரேந்திரபால்சிங், காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு கூடுதல் தலைமை இயக்குநர் திரு. டி.கே. இராஜேந்திரன், காவல்துறை குற்றப்பிரிவு கூடுதல் தலைமை இயக்குநர் திரு.கரன்சின்கா, சென்னை பெருநகர காவல் துறை ஆணையர் திரு.எஸ். ஜார்ஜ், காவல்துறை உள்நாட்டு பாதுகாப்புத் தலைவர் திரு.பி.கண்ணப்பன், காவல்துறை சி.பி.சி.ஐ.டி.துறை தலைவர் திரு.மகேஷ் குமார் அகர்வால் மற்றும் காவல் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்