முக்கிய செய்திகள்:
நாளை நடைபெறவிருந்த மாநில அளவிலான தேசியத் திறனாய்வுத் தேர்வு வருகிற 24-ம் தேதி நடைபெறும் -அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

புயல் மற்றும் கனமழை காரணமாக நாளை நடைபெறவிருந்த மாநில அளவிலான தேசியத் திறனாய்வுத் தேர்வு தள்ளி வைக்கப்பட்டு, வருகிற 24-ம் தேதி தேர்வு நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புயல் மற்றும் கனமழை காரணமாக நாளை நடைபெறவிருந்த மாநில அளவிலான தேசியத் திறனாய்வுத் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நுழைவுச் சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள அதே தேர்வு மையத்தில் வருகிற 24-ம் தேதி இத்தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்