முக்கிய செய்திகள்:
நாகை அருகே கரையை கடந்தது, காற்றழுத்த தாழ்வு மண்டலம் - தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டிருந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பொதுமக்கள் நிம்மதி

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாகப்பட்டிணத்திற்கு மேற்கே நண்பகலில் கரையை கடந்தது. காற்றின் வேகம் குறைந்ததால், அந்த பகுதியில் மழை குறைந்து இருந்ததாலும், வடமாவட்டங்களில் வரும் 24 மணிநேரத்திற்கு கனமழை பெய்யும் எனவும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காலை 12 மணியளவில் மேற்கு திசை நோக்கி நகர்ந்து, நண்பகலில் கரையை கடந்துள்ளது. அப்போது காற்றின் வேகம் குறைந்து இருந்ததால், நாகப்பட்டிணம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை கரையை கடந்த தகவலை உறுதிபடுத்தியுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், வரும் 24 மணிநேரத்திற்கு வடமாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்