முக்கிய செய்திகள்:
ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் - அடுத்த மாதம் 26-ம் தேதி கடைசி நாள் என அறிவிப்பு

ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது இன்று தொடங்கியது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க, அடுத்த மாதம் 26-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, ஹைதராபாத், மும்பை, கான்பூர் உட்பட 15 இடங்களில் ஐ.ஐ.டி. எனப்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்காக, பிளஸ் டூ முடித்தவர்களும், தற்போது பயின்று வருபவர்களும், ஜெ.இ.இ. எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வை எழுத, இன்று முதல், அடுத்த மாதம் 26-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இணையதள முகவரி, jeemain.nic.in என தெரிவிக்கப்பட்டுள்ளது. J.E.E தேர்வு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது.

மேலும் செய்திகள்