முக்கிய செய்திகள்:
மொஹரம் பண்டிகை வருகிற 15ம் தேதி அனுசரிக்கப்படுவதையொட்டி, அன்றைய தினம் அரசு விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு

மொஹரம் பண்டிகை வருகிற 15ம் தேதி அனுசரிக்கப்படுவதையொட்டி, அன்றைய தினம் அரசு விடுமுறை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வருகிற 14ம் தேதி மொஹரம் பண்டிகை அனுசரிக்கப்படும் என்றும், இதனால் அன்றைய தினம் அரசு விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த 6ம் தேதி மொஹரம் பிறை தென்பட்டதாக தமிழக அரசின் தலைமை காஜி தெரிவித்த தகவலின்படி, வருகிற 15ம் தேதி மொஹரம் பண்டிகை அனுசரிக்கப்படும் என்றும், இதனால் அன்றைய தினம், அரசு விடுமுறை என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்