முக்கிய செய்திகள்:
புதிதாக கட்டப்பட்டுள்ள 164 கால்நடை மருந்தக கட்டடங்கள், நோய்ப்புலனாய்ப் பிரிவுக் கட்டடங்கள் உள்ளிட்டவற்றை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஜெயலலிதா

தமிழகத்தில் அரியலூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சுமார் 43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 164 கால்நடை மருந்தக கட்டடங்களை முதலமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார். மேலும், கிருஷ்ணகிரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் 91 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 கால்நடை நோய் புலனாய்வு பிரிவு கட்டடங்களையும் முதலமைச்சர் ஜெயலலிதா திறந்துவைத்தார். இதன் மூலம், 20 லட்சம் கால்நடைகள் பயனடையும்.

கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்திடவும், கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும் கால்நடைகளின் பங்கு இன்றியமையாததாகும். கிராமப்புற பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கால்நடைகள் நன்கு பராமரித்திடவும், மனிதர்களுக்கு இணையான மேம்பட்ட தரமான மருத்துவ சிகிச்சை கால்நடைகளுக்கு அளித்திடவும் முதலமைச்சர் .ஜெ ஜெயலலிதா தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அதன்படி, அரியலூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் 2 கால்நடை மருந்தக கட்டடங்கள், கடலூரில் 21, தர்மபுரியில் 9, திண்டுக்கல்லில் 3, ஈரோட்டில் 10, காஞ்சிபுரத்தில் 2, கன்னியாகுமரியில் 6, கரூரில் 1, கிருஷ்ணகிரியில் 9, மதுரையில் 6, நாகப்பட்டினத்தில் 3, நாமக்கல்லில் 1, புதுக்கோட்டையில் 8, ராமநாதபுரத்தில் 2, சிவகங்கையில் 5, தஞ்சாவூரில் 10, தேனியில் 6, திருவள்ளூரில் 7, திருவண்ணாமலையில் 11, திருவாரூரில் 2, தூத்துக்குடியில் 8, திருப்பூரில் 4, திருச்சிராப்பள்ளியில் 12, விருதுநகரில் 8, வேலூரில் 6 என மொத்தம் 42 கோடியே 37 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 164 கால்நடை மருந்தகக் கட்டடங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார்.

கிருஷ்ணகிரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் 91 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 கால்நடை நோய் புலனாய்வு பிரிவு கட்டடங்களையும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 43 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உறைவிந்து வங்கி கட்டடத்தையும் முதலமைச்சர் . ஜெயலலிதா திறந்து வைத்தார். இந்த கால்நடை மருந்தகங்கள், அறுவை சிகிச்சை அறை, ஆய்வக அறை, சிகிச்சைக் கூடம் ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த கால்நடை மருந்தகங்கள் அமைக்கப்பட்டதன் மூலம் சுமார் 20 லட்சம் கால்நடைகள் பயனடையும்- இந்நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் திரு.டி.கே.எம்.சின்னய்யா, தலைமைச் செயலாளர் திருமதி.ஷீலா பாலகிருஷ்ணன், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறைச் செயலாளர் முனைவர் ச.விஜயகுமார், கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர் முனைவர் ஆர்.பழனிச்சாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்