முக்கிய செய்திகள்:
அ.இ.அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் இல்லத் திருமண வரவேற்பு விழா : முதலமைச்சர் ஜெயலலிதா பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்

முதலமைச்சர் ஜெயலலிதா, சென்னையில் நடைபெற்ற, சோழிங்கநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. K.P.கந்தன், உத்திரமேரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வாலாஜாபாத் பா. கணேசன், ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. D. ஜெயக்குமார் மற்றும் மாநகர போக்குவரத்துக்கழக அண்ணா தொழிற்சங்க துணைத் தலைவர் திரு. P. துளசிதாஸ் ஆகியோரின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட ஜெ. ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளரும், சோழிங்கநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு. K.P.கந்தனின் மகள் டாக்டர் K.P.K. இந்துமதி - மணமகன் டாக்டர் B. சிவராஜ், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க. செயலாளரும், உத்திரமேரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு. வாலாஜாபாத் பா. கணேசனின் மகன் W.P.G. சரவணன் - மணமகள் D. லோகேஸ்வரி, ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. D. ஜெயக்குமாரின் மகன் டாக்டர் J. ஜெயவர்தன் - மணமகள் டாக்டர் R. ஸ்வர்ணலெஷ்மி மற்றும் சென்னை மாநகர போக்குவரத்துக்கழக அண்ணா தொழிற்சங்க துணைத் தலைவர் திரு. P. துளசிதாஸ் மகன் T. புத்தநேசன் - மணமகள் ஆர். திவ்யா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை திருவான்மியூரில் நேற்று நடைபெற்றது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகை தந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவுக்கு, சாலையின் இருமருங்கிலும் பெருந்திரளாகத் திரண்டிருந்த அ.இ.அ.தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும் செண்டை மேளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

விழா மேடைக்கு வருகை தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.கே.பி.கந்தன், வாலாஜாபாத் திரு.கணேசன், திரு.டி.ஜெயக்குமார் மற்றும் மாநகர போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்க துணைத்தலைவர் திரு.துளசிதாஸ் ஆகியோர் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இதையடுத்து முதலமைச்சர் ஜெயலலிதா, திரு. K.P.கந்தனின் மகள் டாக்டர் K.P.K. இந்துமதி - மணமகன் டாக்டர் B. சிவராஜ் ஆகியோருக்கு மலர் மாலைகளை எடுத்து கொடுத்தார். மாலைகளை மாற்றிக்கொண்ட மணமக்களை, முதலமைச்சர் அட்சதை தூவி வாழ்த்தி, பரிசு பொருள் வழங்கினார்.

தொடர்ந்து, திரு. வாலாஜாபாத் பா. கணேசனின் மகன் W.P.G. சரவணன் - மணமகள் D. லோகேஸ்வரி ஆகியோருக்கு மலர் மாலைகளை எடுத்து கொடுத்த முதலமைச்சர் ஜெயலலிதா, மாலைகளை மாற்றிக்கொண்ட மணமக்களை அட்சதை தூவி வாழ்த்தி, பரிசு பொருள் வழங்கினார்.

பின்னர், திரு. D. ஜெயக்குமாரின் மகன் டாக்டர் J. ஜெயவர்தன் - மணமகள் டாக்டர் R. ஸ்வர்ணலெஷ்மி ஆகியோருக்கு மலர் மாலைகளை எடுத்து கொடுத்த முதலமைச்சர் ஜெயலலிதா, மாலைகளை மாற்றிக்கொண்ட மணமக்களை அட்சதை தூவி வாழ்த்தி, பரிசு பொருள் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஜெயலலிதா, திரு. P. துளசிதாசின் மகன் T. புத்தநேசன் - மணமகள் ஆர். திவ்யா ஆகியோருக்கு மலர் மாலைகளை எடுத்து கொடுத்தார். மாலைகளை மாற்றிக்கொண்ட மணமக்களை, முதலமைச்சர் அட்சதை தூவி வாழ்த்தி, பரிசு பொருள் வழங்கினார்.

இதனையடுத்து, முதலமைச்சர் ஜெயலலிதாவுடன், மணமக்கள் அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

மேலும் செய்திகள்