முக்கிய செய்திகள்:
தமிழகத்தில் தொடர்ந்து பரவலாக மழை - மேலும் நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் த

தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துவரும் நிலையில், கனமழை காரணமாக, கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், தரங்கம்பாடி ஆகிய இடங்களிலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்துள்ளது. காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் விட்டுவிட்டுப் பெய்துவரும் மழையினால், சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையின் காரணமாக, நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. பாபநாசம் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்திருப்பதால், அணை மூடப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம் ஆறுகாட்டுத்துறை மற்றும் கோடியக்கரை கடற்பகுதியில் கடல் சீற்றமாகக் காணப்பட்டதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. ஏராளமான படகுகள் கரையோரத்திலேயே நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. அம்மாவட்டத்தில், மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய இடங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், கடலூர் மாவட்டத்திலும் கனமழை பெய்து வருவதால், கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய பகுதிகளில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வங்கக்கடலில், இலங்கையையொட்டியுள்ள பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை, மேற்கு நோக்கி நகர்ந்து கன்னியாகுமரி கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது.

இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், அநேக இடங்களில் மழையும், கடலோரப் பகுதிகளில் கனமழையும் பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்