முக்கிய செய்திகள்:
சேலத்தில் இருந்து மேட்டூர் செல்லும் ரயில் நாளை முதல் தற்காலிகமாக நிறுத்தம்..
சேலம்: சேலத்தில் இருந்து மேட்டூர் செல்லும் பயணிகள் ரயில் நாளை முதல் பராமரிப்பு பணி காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது, இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சேலம் முதல் மேட்டூர் வரையில் செல்லும் ரயில் பாதை முழுவதிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இதனால் சேலம் - மேட்டுர் பயணிகள் ரயில் சேவை நாளை முதல் நிறுத்தி வைக்கப்படுகின்றன, இதேபோல ஈரோட்டில் இருந்து சேலம் வழியாக மேட்டூர் செல்லும் ஈரோடு பயணிகள் ரயில் சேலம் வரை மட்டுமே இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இருப்பு பாதை முழுவதுமாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் நாளை முதல் மார்ச் மாதம் 12 ம் தேதி வரையில் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள்