முக்கிய செய்திகள்:
காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியை தடுக்கக் கோரி , 28-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்.
திருவாரூர்: காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியை தடுக்கக் கோரி சென்னையில் வரும் 28-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு முடிவெடுத்துள்ளது, இது தொடர்பாக தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட விவசாய சங்கங்களின் ஒருங் கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறியதாவது, காவிரி நதி நீர்ப் பிரச்சினை என்பது ஏதோ விவசாயிகளின் பிரச்சினை என்பது போலவும் அது தமிழகத்தின் ஓரிரு மாவட்டங்களை மட்டுமே பாதிக்கிற விஷயமாகவும் பார்க் கப்படுகிறது இது தவறான பார்வையாகும், காவிரி ஆற்றின் குறுக்கே அணையைக் கட்டியே தீருவோம் என்று கர்நாடக மாநிலத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. அவ்வாறு அணை கட்டப்பட்டால் சென்னைக்கு குடிநீர் வழங்கிவரும் வீராணம் குடிநீர் திட்டம் 80 சதவீதம் பாதிக்கப்படும் சேலம் திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 20 மாவட் டங்களைச் சேர்ந்த மக்களின் நீராதாரம் பெரும் பிரச்சினைக்கு உள்ளாகும், இதனைக் கருத்தில்கொண்டு கடந்த டிசம்பர் 15,16,17 ஆகிய மூன்று நாட்கள் புதுடெல்லியில் தொடர் உண்ணாவிரதம் இருந் தோம். அப்படியும் பிரதமரைச் சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கவில்லை பிரதமர் அலுவலகம் இதுகுறித்து இன்று வரை சிறு செய்திகூட வெளியிட வில்லை, காவிரி நதி நீர் தமிழகத்துக்கு கிடைக்காவிட்டால், தமிழக விவசாய நிலங்கள் பாதிக்கப் பட்டு, அவை உலகப் பெரு முதலா ளிகளின் கைகளுக்கு சென்று விடும். ஆகவே, கர்நாடக அரசின் அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த, மத்திய அரசு உடனடியாக அறிக்கையொன்றை வெளியிட வேண்டும். இதை வலி யுறுத்தி தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் பங்கேற்கும் ஆர்ப் பாட்டத்தை 28-ம் தேதி ஆளுநர் மாளிகைமுன் நடத்த அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தீர்மானித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகள்