முக்கிய செய்திகள்:
சித்த மருத்துவக் கல்லூரி பட்டயப் படிப்புகளுக்கு ஜனவரி 5-ஆம் தேதி கலந்தாய்வு.
சென்னை: தமிழக அரசு சித்த மருத்துவக் கல்லூரி பட்டயப் படிப்புகளுக்கு ஜனவரி 5-ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறவுள்ளது, செவிலிய சிகிச்சை (நர்சிங் தெரபி), ஒருங்கிணைந்த மருந்தகம் (இன்டகிரேட்டட் பார்மஸி) ஆகிய இரண்டு படிப்புகளுக்கு டிசம்பர் 15-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டனசென்னை அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரிகளில் இந்த பட்டயப் படிப்புகள் நடத்தப்படுகின்றன இரண்டு கல்லூரிகளிலும் சேர்த்து மொத்தம் 200 இடங்கள் உள்ளன இந்தப் படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் தமிழக அரசின் www.tnhealth.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்தில் காலை 10 மணிக்கு கலந்தாய்வு தொடங்கும் இதில் பங்கேற்கும் மாணவர்கள் தங்கள் அசல் சான்றிதழ்கள் அல்லது தற்போது படித்து வரும் கல்லூரியிலிருந்து பெற்ற ஆளறிச் சான்றிதழுடன் (Bonafide Certificate) பங்கேற்க வேண்டும்.
மேலும் செய்திகள்