முக்கிய செய்திகள்:
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்க வாசல் இன்று திறக்கப்பட்டது.
திருச்சி: 108 வைணவ திருத்தலங்களில் முதன்மை தலமாக கருதப்படும் திருச்சி ஸ்ரீரங்க கோயிலில் கடந்த 21ம் தேதி முதல் வைகுண்ட ஏகாதேசி திருவிழா தொடங்கியது. பகல்பத்து உற்சவ நாட்களில் அர்சுணன் மண்டபத்தில் நம்பெருமாள் காட்சியளித்ததார். இராப்பத்து திருவிழா முதல் நாளான இன்று அதிகாலை 3.45 மணிக்கு கருவறையில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள் ராஜமகேந்திரன் திருச்சுற்று வழியாக நாழிகேட்டான் வாயிலை அடைந்தார், துறைபிரதட்சனம் கொடிமரம் வழியாக குலசேகரன் சுற்று எனப்படும் துறை பிரகாரம் வழியாக விரஜானதி மண்டபத்தை அடைந்த நம்பெருமாள் வேத விண்ணப்பங்களை கேட்டருளிய பின்பு அதிகாலை 5 மணிக்கு பக்தர்களின் ரங்கா, ரங்கா என்ற கோஷத்துடன் பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசலை கடந்து சந்திர புஷ்கர்ணி மணவெளி வழியாக ஆயிரங்கால் மண்டபத்தை அடைந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
மேலும் செய்திகள்