முக்கிய செய்திகள்:
இலங்கை சிறைகளில் உள்ள 66 தமிழக மீனவர்கள் விடுதலை.
கொழும்பு: இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 66 பேரை விடுதலை செய்து அந்நாட்டு நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளன, தமிழகத்தில் ராமேஸ்வரம், நாகை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 66 மீனவர்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர், இவர்களை விடுதலை செய்து இன்று ஊர்காவல் துறை மற்றும் பருத்தித் துறை நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளன, விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 66 பேரும் நாளை இரவு காரைக்கால் துறைமுகத்துக்கு வந்து சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் விடுவிக்கப்பட உள்ள நிலையில், தமிழக மீனவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்