முக்கிய செய்திகள்:
பா ஜ க வில் சேர நான் ஒன்றும் ஆசி வழங்கவில்லை நெப்போலியனுக்கு அழகிரி பதிலடி.
சமீபத்தில் தி.மு.க.,வில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நெப்போலியனுக்கு நான் ஒன்றும் ஆசி வழங்கவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்,திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் நெருங்கிய உறவினரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான நடிகர் நெப்போலியன் நேற்று அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,தி.மு.க.வில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை. மு.க.அழகிரியின் ஆசியோடுதான் பாஜகவில் இணைந்தேன் என்று தெரிவித்தார், இந்நிலையில் நடிகர் நெப்போலியன் கருத்துக்கு மு.க. அழகிரி மறுப்பு தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியபோது, பாஜகவில் சேர்ந்துள்ள நடிகர் நெப்போலியன் எனது ஆசியோடுதான் அந்த கட்சியில் சேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.,பாஜகவில் இணைந்த நெப்போலியனுக்கு நான் ஒன்றும் ஆசி வழங்கவில்லை. யாரையும் திமுகவில் இருந்து விலகி வேறு கட்சியில் சேருங்கள் என்றும் சொல்லவில்லை. மேலும் திமுகவுக்கு எதிராக எந்த காலத்திலும் செயல்படமாட்டேன் என்று கூறினார்.
மேலும் செய்திகள்