முக்கிய செய்திகள்:
ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டு வரும் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி, இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் ஆய்வு.
சென்னை: ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டு வரும் புதிய மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி அளிப்பதற்காக இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் செயல்பட்டு வரும் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையின் மற்றொரு புறத்தில் மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன முதல் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பறைகள், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்டவற்றின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துவிட்டன, இந்தக் கல்லூரிக்கு 100 இடங்களை தமிழக அரசு நிர்ணயித்துள்ளது, முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்பறைகள், ஆய்வகங்கள் உள்ளிட்டவற்றின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துவிட்டன, கல்லூரி தொடங்குவதற்கு இந்திய மருத்துவக் கவுன்சிலின் அனுமதி பெறுவதற்காக, திருவல்லிக்கேணி அரசு கஸ்தூர்பா காந்தி தாய் சேய் நல மருத்துவமனையின் கீழ் இந்த மருத்துவக் கல்லூரி செயல்படவுள்ளது எனவே கஸ்தூர்பா காந்தி தாய் சேய் நல மருத்துவமனையில் கூடுதல் துறைகள் உருவாக்கப்பட்டு தற்போது பொது மருத்துவமனையாகச் செயல்பட்டு வருகிறது, மருத்துவக் கல்லூரிக்கான அங்கீகாரம் அளிப்பதற்கான இந்திய மருத்துவக் கவுன்சிலின் ஆய்வு வெள்ளிக்கிழமை (டிச.19), சனி (டிச.20) ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றன. மூன்று பேர் அடங்கிய குழுவினர் ஆய்வு நடத்தினர்.
மேலும் செய்திகள்