முக்கிய செய்திகள்:
ஓய்வூதியதாரர்கள் புதிய மருத்துவ காப்பீட்டுக்காக 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

1995-ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவ நல நிதித் திட்டத்திற்கு மாற்றாக தமிழ்நாடு ஓய்வூதியதாரர்கள் (வாழ்க்கைத் துணை உட்பட) குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2014, நான்கு ஆண்டுகளைக் கொண்ட ஒரு தொகுப்பு கால அளவிற்கு (1-7-2014 முதல் 30-6-2018 முடிய), இரண்டு லட்சம் ரூபாய் வரை பணச் செலவின்றி மருத்துவச் சிகிச்சை பெற்றுக்கொள்ளும் வகையில், பொதுத்துறை நிறுவனமான சென்னை, யுனைடெட் இந்திய காப்பீட்டு நிறுவனத்தின் வாயிலாக கருவூல கணக்குத்துறை இயக்குனர் செயல்படுத்திட ஆணையிடப்பட்டு, 1-7-2014 முதல் செயற்படுத்தப்பட்டு வருகிறது.

எனவே, 30.6.14 முடிய தமிழ்நாடு ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவ நல நிதித்திட்டத்தின்கீழ் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு நிதியுதவி பெற தகுதியுள்ள ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களுடைய வாரிசுகள் உரிய ஆவணங்களுடன் கூடிய விண்ணப்பத்தினை தாங்கள் சம்பந்தப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியம் வழங்கும் அலுவலர், சென்னை, மாவட்ட கருவூல அலுவலர்கள், சார்நிலைக் கருவூல அலுவலர்கள், பொதுத்துறை வங்கிகளின் கிளை மேலாளர்கள் அவர்களிடம் 15.9.14-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், அவ்வாறு பெறப்படும் விண்ணப்பத்தினை உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் அலுவலர்கள் 30.9.14-க்குள் ஓய்வூதிய இயக்ககத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்