Deprecated: mysql_connect(): The mysql extension is deprecated and will be removed in the future: use mysqli or PDO instead in /home/content/55/10886855/html/makkalkattalai/tamizhagatimes/adminpanel/inc/config.php on line 12
ஐஏஎஸ் அதிகாரிகள் 9 பேர் பணியிட மாற்றம் - Tamizhaga Times
முக்கிய செய்திகள்:
ஐஏஎஸ் அதிகாரிகள் 9 பேர் பணியிட மாற்றம்

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மோகன் வர்கிஸ் சுங்கத் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குனரான யு.சகாயம், இந்திய மருந்து மற்றும் ஓமியோபதி இயக்குனராக நியமிக்கப்படுகிறார். மாநில மனித உரிமைகள் ஆணைய முன்னாள் செயலாளர் தேவ் ராஜ் தேவ், ஒழுங்குமுறை நடவடிக்கை ஆணைய கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.ஊரக வளர்ச்சி மற்றும் கிராம பஞ்சாயத்து துறை இணை செயலாளர் சி.சகாய மூர்த்தி, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குனராக நியமிக்கப்படுகிறார். தொழிலாளர் துறை கமிஷனர் எம்.வீர சண்முக மணி, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

எரிசக்தித்துறை செயலாளர் ராஜேஷ் லக்கானி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். மேலும், எரிசக்தித் துறை செயலாளர் பொறுப்பையும் அவர் கூடுதலாக கவனிப்பார். இந்திய மருந்து மற்றும் ஓமியோபதி கமிஷனர் அபூர்வா, கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.

சிறு தொழில் வளர்ச்சி கழகம் (சிட்கோ) நிர்வாக இயக்குனராக ஜெக்மோகன் சிங் ராஜூ நியமிக்கப்படுகிறார். சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை இணை செயலாளர் கே.நாகராஜன், தமிழ்நாடு கிடங்கு கழக நிர்வாக இயக்குனராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை இணை செயலாளர் வி.அமுதவள்ளி, தமிழ்நாடு சிறுதொழில் கழக (டான்சி) நிர்வாக இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகள்