முக்கிய செய்திகள்:
ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் நீக்கம்: ஜெயலலிதா நடவடிக்கை

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் எம்.ஏ.முனியசாமி இன்று முதல் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். ராமநாதபுரம் மாவட்ட செயலாளராக ஆர்.தர்மர் (முதுகுளத்தூர் ஒன்றிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக செயலாளர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார். இவருக்கு கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்