முக்கிய செய்திகள்:
சுங்கச்சாவடிகளில் 15 சதவீதம் கட்டணம் உயர்வு

தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன நுழைவு கட்டணம் வசூலிக்கும் சுங்கச் சாவடிகள் தமிழ் நாட்டில் 41 இடங்களில் உள்ளது. சாலையை முறையாக பராமரிக்கவும், வாகன ஒட்டிகளும் தேவையான குடிநீர், கழிப்பறை வசதி, தொலைபேசி மையம், ஆம்புலன்ஸ் வசதி ஆகிய அடிப்படை வசதிகளை செய்து தர இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

தொடர்ந்து கட்டணம் வசூலிக்கப்பட்டும், பல இடங்களில் சாலைகள் சரிவர பராமரிக்கப்படாமல் உள்ளன.இதை கண்டித்து லாரி உரிமையாளர்கள், பொது மக்கள், வியாபாரிகள், அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சாலையை முறையாக பராமரிக்காமல் கட்டணத்தை மட்டும் உயர்த்தும் நடவடிக்கையில் சுங்கசாவடி நிர்வாகங்கள் தீவிரம் காட்டத் தொடங்கினர்.தமிழ்நாட்டில் உள்ள 41 சுங்கச் சாவடிகளில் 20 சுங்கச் சாவடிகளில் கடந்த ஜனவரி, ஏப்ரல் மாதங்களில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது. மீதமுள்ள 21 சுங்கச் சாவடிகளில் இன்று முதல் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை கட்டண உயர்வு அமுலுக்கு வந்துள்ளது.

இந்த கட்டண உயர்வு பாடியநல்லூர், கொடைரோடு, வேலன் செட்டியூர், பாளையம், விஜய மங்கலம், புதூர் பாண்டிய புரம், எலியார்பதி, ராசம் பாளையம், ஒமலூர், சமயபுரம், மொரட்டாண்டி, வைகுண்டம், நத்தக்கரை, வீர சோழபுரம், வாழவந்தான் கோட்டை, விக்கிரவாண்டி, பொன்னம்பலப்பட்டி, மணவாசி, திருப்பரைத்துறை, திருமந்துறை, செங்குறிச்சி ஆகிய 21 சுங்கச் சாவடிகளில் இன்று அமுலுக்கு வந்துள்ளது.

இங்கு 10 முதல் 15 சதவீதம் வரை கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, தாம்பரம் – போரூர் பைபாஸ் சாலைகளில் பழைய கட்டணத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.

மேலும் செய்திகள்