முக்கிய செய்திகள்:
ஜெயலலிதாவுக்கு டாக்டர் சேதுராமன் வாழ்த்து

முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மூவேந்தர் முன்னணி கழக நிறுவன தலைவர் டாக்டர் சேதுராமன் அனுப்பி உள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:–

மக்களால் நான் மக்களுக்காக நான் என்று மக்கள் நலப் பணியாற்றி வரும் புரட்சித் தலைவி அம்மா 7–வது முறையாக அ.தி.மு.க. பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏழை மக்களின் ஏழ்மையை விரட்டிவிட ஏற்றம் தரும் அரசாக தமிழக அரசை வழி நடத்திச் செல்லும் புரட்சித் தலைவியை அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் சார்பாக இந்த தருணத்தில் வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இவ்வாறு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்