முக்கிய செய்திகள்:
தமிழ்நாட்டில் உயர்கல்வியை கொண்டு வாருங்கள்: ரோசய்யா

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கூட்டம் சென்னை கவர்னர் மாளிகையில் நடைபெற்றது. கூட்டத்தில் கவர்னர் கே.ரோசய்யா பேசியதாவது:-

உலகில் தலை சிறந்த பல்கலைக்கழகங்கள் 200 உள்ளன. அவற்றில் ஒரு கல்வி நிறுவனம் தான் இந்தியாவில் உள்ளது என்பது கவலைஅளிப்பதாக உள்ளது .இந்தியாவில் 600 பல்கலைக்கழகங்கள் உள்ளன. எனவே 21-ம் நூற்றாண்டை நமதாக்கிக் கொள்ளும் வகையில் பல்கலைக்கழகங்கள் சிறந்துவிளங்கவேண்டும். கல்வியில், வளர்ச்சி, புதிதாக உருவாக்கும் தன்மை, போட்டிப்போட்டு வெற்றிபெறும் தன்மை ஆகியவை இருக்கவேண்டும்.

பல்கலைக்கழகங்களில் மாணவர்களும், ஆசிரியர்களும் ஆராய்ச்சியில் அதிக கவனம் செலுத்தினால் புதிய கண்டுபிடிப்புகளில் சாதனை படைக்க முடியும். 2020-ம் ஆண்டில் 20 வயது முதல் 29 வயது வரை உள்ள உலக இளைஞர்களில் இந்தியாவில் 60 சதவீதம் பேர் இருப்பார்கள். இந்தியாவில் உயர்கல்வி படிப்போர் சதவீதம் 15 முதல் 18 வரைதான் உள்ளது. ஆனால் நாம் இதை 30 சதவீதமாக அதிகரிக்கச்செய்யவேண்டும்.

பிரதமர் நநேரந்திரமோடி கூறுகையில், உயர்கல்விநிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் இளைஞர்களை திறமைமிக்கவர்களாகவும், தொழில் தொடங்குவதற்கான திறமைஉள்ளவர்களாகவும், ஆராய்ச்சியுடன் கூடிய கல்வி கற்பவர்களாகவும் உருவாக்கவேண்டும் என்பதையே நோக்கமாக கொண்டு இருக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தொலைநோக்கு பார்வை 2023-ஐ நனவாக்க உலகத்தரத்திற்கு இணையாக தமிழ்நாட்டில் உயர்கல்வியை துணைவேந்தர்கள் கொண்டுவாருங்கள். மேலும் அறிவு சார் வளர்ச்சியையும், மனிதாபிமானத்தையும், ஆராய்ச்சியுடன் கூடிய தொழில்கல்வியையும் மாணவர்களிடத்தில் உருவாக்குங்கள். இவ்வாறு கவர்னர் கே.ரோசய்யா பேசினார்.

மேலும் செய்திகள்