முக்கிய செய்திகள்:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவிக்கு 29–ந்தேதி தேர்தல்

அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

அ.தி.மு.க. சட்டதிட்ட விதி–30, பிரிவு–2ன்படி, கழக அமைப்புகளின் பொதுத் தேர்தல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்திட வேண்டும் என்ற விதிமுறைக்கேற்ப, கழகப் பொதுச்செயலாளர் பொறுப்புக்கான தேர்தல் கீழ்க்கண்ட அட்டவணைப்படி நடைபெற உள்ளது.

தேர்தல் ஆணையாளர்– டாக்டர் விசாலாட்சி நெடுஞ்செழியன் கழக அமைப்புச் செயலாளர்.

வேட்பு மனு தாக்கல்– 20.8.2014 (புதன்கிழமை காலை 9 மணி முதல்), 24.8.2014 (ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி வரை).

வேட்பு மனு பரிசீலனை – 27.8.2014 (புதன்கிழமை)

வேட்பு மனு திரும்பப் பெறுதல்– 28.8.2014 (வியாழக்கிழமை)

தேர்தல் நாள்–29.8.2014 (வெள்ளிக்கிழமை)

தேர்தல் முடிவு அறிவிப்பு– 29.8.2014 (வெள்ளிக்கிழமை)

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்