முக்கிய செய்திகள்:
தருண் விஜய் எம்.பி.க்கு வைகோ பாராட்டு

சென்னை உயர்நீதி மன்றத்தின் வழக்காடு மொழியாகத் தமிழை அறிவிக்க வேண்டும் என்று, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்த, உத்தரகாண்ட் எம்.பி. தருண் விஜய்க்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளார்.

அந்த கடிதத்தில், திருவள்ளுவர் பிறந்த நாளை, வட இந்தியாவில் 500–க்கும் மேற்பட்ட பள்ளிகள், கல்லூரிகளில் கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்யப் போவதாக நீங்கள் அறிவித்து இருப்பது மகிழ்ச்சிக்கும், பாராட்டுக்கும் உரியதாகும். தமிழ் மக்கள் சார்பாகவும், ம.தி.மு.க சார்பிலும், என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்