முக்கிய செய்திகள்:
தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஜெயலலிதா வாழ்த்து

தமிழக பா.ஜனதா தலைவராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பா.ஜனதா கட்சியின் முதல் பெண் தலைவர் என்ற பெருமை பெற்றுள்ளார்.

அவருக்கு முதல்– அமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:–

தாங்கள் தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு எனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக தங்களது பணி சிறக்க எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்