முக்கிய செய்திகள்:
மோடிக்கு ஜெயலலிதா நன்றி தெரிவித்தார்

மக்களவை துணை சபாநாயகராக அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, தம்பிதுரையை தேர்வு செய்வதற்கு உதவியாக இருந்த தாங்களுக்கு நன்றி என்று தெரிவித்தார். மேலும், கடிதமும் அனுப்பியுள்ளார்.

முன்னதாக, மக்களவையில் எதிர்க்கட்சியாக இருக்கும் கட்சிக்கு துணை சபாநாயகர் பதவி கொடுப்பது வழக்கம். ஆனால், காங்கிரஸ் எதிர்க்கட்சிக்கு தேவையான 55 எம்.பி. எண்ணிக்கை பெறாததால் பா.ஜனதா கட்சி, காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்க மறுத்துவிட்டது. அத்துடன் துணை சபாநாயகர் பதவியையும் விட்டுக்கொடுக்கவில்லை.

அதற்குப் பதிலாக அ.தி.மு.க.வுக்கு துணை சபாநாயகர் பதவி கொடுக்க முன்வந்தது. எனவே, துணை சபாநாயகர் பதவிக்கு தம்பிதுரை நேற்று மனுதாக்கல் செய்தார். இவருக்கு காங்கிரஸ் உள்பட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

இதனால் அவரை எதிர்த்து யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. இதனையடுத்து இன்று அவர் துணை சபாநாயகராக போட்டியின்றி அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு பிரதமர் மோடி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்