முக்கிய செய்திகள்:
விஜயகாந்த் 16–ந் தேதி நிர்வாகிகளுடன் சந்திப்பு

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சமீபத்தில் சிங்கப்பூர் சென்று கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக மீண்டும் வெளிநாடு சென்று 13 நாள் தங்கி இருந்தார்.

கடந்த மாதம் சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் சக்கர நாற்காலியில் அமர்ந்து காரில் ஏறி வீட்டுக்கு சென்றார்.

அதன் பிறகு அவர் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார். கடந்த 22 நாட்களாக நடைபெற்ற சட்டசபை கூட்டத் தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை இந்த நிலையில் அவர் வருகிற 16–ந் தேதி நிர்வாகிகளை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.

கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், அணி நிர்வாகிகள் மற்றும் முக்கிய கட்சி நிர்வாகிகளை சந்தித்து விரிவாக ஆலோசனை நடத்த உள்ளார்.

கட்சியை பலப்படுத்துவது குறித்தும், கட்சி வளர்ச்சிக்கு தேவையான ஆக்கப்பூர்வ செயல்பாடுகள் குறித்தும் விஜயகாந்த் விரிவாக ஆலோசனை நடத்த உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

 

மேலும் செய்திகள்