முக்கிய செய்திகள்:
பாமக வீடு வீடாக உறுப்பினர் சேர்க்கை

பா.ம.க. உறுப்பினர் சேர்க்கை இன்று தொடங்கியது. இந்த மாதம் இறுதி வரை உறுப்பினர் சேர்க்கை நடக்கிறது.

சென்னையில் உறுப்பினர் சேர்க்கையை ராயபுரம் தொகுதியில் இன்று கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி தொடங்கி வைத்தார்.16 தொகுதிகளிலும் வீடு வீடாக சென்று உறுப்பினர்களை சேர்க்கிறார்கள். ஒவ்வொரு தொகுதிக்கும் 75 ஆயிரம் வரை உறுப்பினர்களாக சேர்க்க திட்டமிட்டுள்ளனர். உறுப்பினர் கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்படுகிறது.

உறுப்பினர் சேர்க்கையின் போது பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றப்போகும் திட்டங்கள் பற்றிய துண்டு பிரசுரங்களையும் விநியோகிக்கிறார்கள்.அதில் மதுக்கடைகளை மூடுவோம், ஒவ்வொரு வீட்டுக்கும் 50 லிட்டர் இலவச மினரல் வாட்டர், பட்டப்படிப்பு வரை தரமான இலவச கல்வி, நடைபாதைகளுடன் சாலைகள் சீரமைப்பு, தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்பது உள்பட பல வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.

மேலும் செய்திகள்