முக்கிய செய்திகள்:
தமிழக வீரர்களுக்கு தலா ரூ.30 லட்சம்: ஜெயலலிதா

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு தலா ரூ.30 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் டேபிள் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் தமிழக வீரர்கள் அமல்ராஜ், சரத் கமல் ஜோடி வெள்ளி பதக்கம் வென்றது. பதக்கம் வென்ற வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளார்.

காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ரூ.30 லட்சம் வழங்கப்படும் என்று 2011ல் தான் அறிவித்ததை தனது கடிதத்தில் சுட்டிக் காட்டிய ஜெயலலிதா, அந்த பதக்கத்திற்கு அமல்ராஜ் மற்றும் சரத் கமல் இருவரும் தகுதி பெற்றிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.இவர்கள் இருவரும் எதிர்காலத்தில் இந்தியா சார்பிலும் தமிழ்நாடு சார்பிலும் பல்வேறு வெற்றிகளை பெறவும் முதல்வர் ஜெயலலிதா வாழ்த்தியுள்ளார்.

மேலும் செய்திகள்