முக்கிய செய்திகள்:
வியாபாரிகள்-சுங்கத்துறை அதிகாரிகள் மோதல்

சிங்கப்பூரில் இருந்து இன்று காலை சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 10–க்கும் மேற்பட்டவர்கள் வெளிநாட்டில் இருந்து எலக்ட்ரானிக் சாதனங்கள், வாசனை திரவியங்கள் போன்றவற்றை கொண்டு வந்தனர். அவற்றிற்கு உரிய பில்லும் வைத்திருந்தனர்.

ஆனால் சுங்கத்துறை அதிகாரிகள் பொருட்களை கடத்தி வந்துள்ளதாக கூறினர். நீங்கள் பல முறை வெளிநாடுகளுக்கு சென்று பொருட்களை எடுத்து வருகிறீர்கள். அது தவறு. பொருட்களை பறிமுதல் செய்து கைது செய்வோம் என மிரட்டினர்.

இதனால் சுங்கத்துறை அதிகாரிகளுக்கும் வெளிநாட்டு பொருட்களை கொண்டு வந்த வியாபாரிகளுக்கும இடையே தகராறு ஏற்பட்டது. ஒருவருக் கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.நாங்கள் கொண்டு வரும் பொருட்களுக்கு பில் உள்ளது. கூடுதலாக வரி போட வேண்டும் என்றால் போட்டு கொள்ளுங்கள். அதற்காக தரக்குறைவாக பேசக் கூடாது என அவர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரும் சென்னையில் வெளிநாட்டு பொருட்களை வியாபாரம் செய்யும் வியாபாரிகள் ஆவர்.

இதுபற்றி வியாபாரி ஒருவர் கூறும் போது, சோப்பு, சென்ட், டீத்தூள் மற்றும் டி.வி. உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை கொண்டு வருவது குற்றமா? அதற்கு என்ன வரி விதிக்க வேண்டுமோ போட்டு கொள்ளட்டும். அதற்காக எங்களை தரக் குறைவாக நடத்துவதா? நாங்கள் எத்தனை முறை வெளிநாடுகளுக்கு சென்று வந்தால் என்ன? அதைப் பற்றி பேசுவதற்கு இவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று ஆவேசமாக கூறினார்.வியாபாரிகள், சுங்கத் துறை அதிகாரிகள் மோதல் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்