முக்கிய செய்திகள்:
சட்டசபையில் தே.மு.தி.க. வெளிநடப்பு

சட்டசபையில் இன்று மானிய கோரிக்கை தொடங்குவதற்கு முன்னர் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் எழுந்து ஒரு பிரச்சினை குறித்து விவாதிக்க அனுமதி கேட்டனர்.

அப்போது, சபாநாயகர் குறுக்கிட்டுஉங்கள் கட்சி சட்டமன்ற தலைவருக்கு ஏற்கனவே அனுமதி கொடுத்து விட்டேன். ஒவ்வொருவருக்கும் பேச அனுமதி தர இயலாது என்றார்.

ஆனாலும் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து நின்று கொண்டு பேச அனுமதி கேட்டனர். வாய்ப்பு கிடைக்காததால் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

சட்டசபைக்கு வெளியே சந்திரகுமார் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:–

அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க கடந்த 15 நாட்களுக்கு முன்பே சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர அனுமதி கேட்டு இருந்தோம். இன்னும் அது விவாதத்துக்கு வரவில்லை.

நாங்கள் கேட்கும் போதெல்லாம் பதில் வந்ததும் எடுக்கிறோம் என்று சபாநாயகர் கூறுகிறார். தக்காளி கிலோ ரூ.80–க்கும், மிளகாய் ரூ.60–க்கும் வெளி மார்க்கெட்டில் விற்கிறது. அதைப்பற்றி கூட பேச அனுமதியில்லை.

விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வர இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு இன்று இதுபற்றி பேச அனுமதி கிடைக்காததால் அவையில் இருந்து வெளி நடப்பு செய்தோம்.இவ்வாறு அவர் கூறினார்.

 

 

மேலும் செய்திகள்