முக்கிய செய்திகள்:
தங்கம் வென்ற தமிழக வீரருக்கு ரூ.50 லட்சம் பரிசு: ஜெயலலிதா

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தமிழக பளுதூக்கும் வீரர் சதீஷ் சிவலிங்கம் தங்கம் வென்று சாதனை படைத்தார். அவருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றதன்மூலம் நாட்டிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்திருக்கிறீர்கள். இந்த அற்புதமான சாதனையை செய்ததற்காக உங்களுக்கு தமிழக மக்கள் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வெல்லும் விளையாட்டு வீரர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என 2011ல் அறிவித்திருந்தேன். இப்போது அந்த பரிசுத்தொகையை பெறுவதற்கு தாங்கள் தகுதி பெற்றுள்ளீர்கள். எதிர்காலத்தில் இதுபோன்று மேலும் பல பதக்கங்களை பெறவும் வாழ்த்துகிறேன்.

மேலும் செய்திகள்