முக்கிய செய்திகள்:
பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

ஐ.நா. விசாரணைக் குழு இந்தியாவிற்கு வந்து விசாரிக்க அரசு விசா வழங்க மறுத்திருப்பதாக வெளியான செய்தி உண்மையாக இருந்தால் அது தமிழக மக்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக இருக்கும். இலங்கைத் தமிழ் அகதிகள் பலர் தமிழகத்தில் உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இந்த விஷயத்தில் பிரதமர் தலையிட்டு, ஐ.நா. குழுவினருக்கு தேவையான விசா வழங்குவதை உறுதி செய்வதுடன், இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து நியாயமான பாரபட்சமற்ற விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்