முக்கிய செய்திகள்:
திமுக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்டு

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்ட பின்பு சட்டசபையில் சபாநாயகர் தனபால் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அவர் கூறியதாவது:–

தி.மு.க உறுப்பினர்கள் இன்றைய கூட்டத்தின் போது சட்டமன்ற விதியை துச்சமாக கருதி சபையை நடத்த முடியாத அளவுக்கு இடையூறு செய்தனர். குந்தகம் விளைவிக்கும் நோக்கில் நடந்து கொண்டனர். அவர்கள் பேரவையில் இருந்து 4–வது முறையாக இந்த கூட்டத்தொடரில் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

2 முறைக்கு மேல் உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டாலே அந்த கூட்டத் தொடர் முழுவதும் அவர்களால் கலந்து கொள்ள இயலாது. ஆனாலும் தி.மு.க. உறுப்பினர்கள் 2–வது முறையாக வெளியேற்றப்பட்ட பிறகும் அவர்கள் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்பதற்காக அவர்கள் சபையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனாலும் வேண்டும் என்றே அவையில் குந்தகம் விளைவித்ததாலும் இன்று 4–வது முறையாக அவர்கள் வெளியேற்றப்பட்டு உள்ளதாலும் எஞ்சிய இந்த கூட்டத்தொடர் முழுவதும் அவர்கள் கலந்து கொள்ள இயலாது என அறிவிக்கிறேன்.இவ்வாறு சபாநாயகர் கூறினார்.

மேலும் செய்திகள்