முக்கிய செய்திகள்:
ஜூனியர் விகடன் பத்திரிகை மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு தாக்கல்

வாரம் இருமுறை வெளியாகும் ஜூனியர் விகடன் பத்திரிகையில் கடந்த சனிக்கிழமை வெளியான இதழில், ஜெயலலிதா எனக்கு அக்கா என்ற தலைப்பில் பெங்களூரை சேர்ந்த சைலஜா என்பவரது பேட்டி வெளியானது. இதையடுத்து, அந்த பத்திரிகையின் ஆசிரியர் திருமாவேலன், நிருபர்கள் ரமேஷ், வாசுவேதன், மாதவன் மற்றும் பேட்டி அளித்த சைலஜா ஆகியோர் மீது சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சார்பில் மாநகர அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன், அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சமுதாயத்தில் உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக இந்த செய்தி வெளியாகியுள்ளதால், இந்த பத்திரிகையின் ஆசிரியர் உள்ளிட்ட 5 பேர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆதிநாதன் முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

மேலும் செய்திகள்