முக்கிய செய்திகள்:
ஜெயலலிதா அறிவிப்புக்கு வைகோ வரவேற்பு

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து கொண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு அனுமதி மறுத்த சென்னை கிரிக்கெட் சங்க கிளப்பின் செயல் தமிழகத்தில் அனைத்துத் தரப்பினரின் கண்டனத்துக்கும் ஆளாயிற்று.சட்டமன்றத்தில் அனைத்து அரசியல் கட்சியினரும் இத்தகைய செயல்கள் இனிமேல் நிகழாதவாறு சட்ட பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர்.

தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை கிரிக்கெட் சங்க கிளப் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்ததோடு, இனிமேல் இத்தகைய செயல்கள் எங்கும் நடைபெறாமல் தடுக்கும் விதத்தில் சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதை அறிவித்தது மிகவும் வரவேற்கத் தக்கது ஆகும். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்