முக்கிய செய்திகள்:
பாமக வெள்ளி விழா தொடங்கியது

பா.ம.க. தொடங்கி 25 ஆண்டுகள் ஆவதை யொட்டி இந்த மாதம் முழுவதும் வெள்ளி விழாவை சிறப்பாக கொண்டாடும்படி கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதையொட்டி சென்னை மாவட்டத்தில் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று தொடக்க விழா நடைபெற்றது. முன்னாள் மத்திய மந்திரியும், துணை பொதுச் செயலாளருமான ஏ.கே. மூர்த்தி கட்சிக்கொடி ஏற்றி வைத்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

அப்போது அவர் பேசும் போது,கட்சி கடந்து வந்த பாதை, சந்தித்த சோதனைகள், பல்வேறு போராட்டங்கள் நடத்தி மக்கள் மனதில் இடம் பெற்றிருப்பதை சுட்டிக்காட்டி தொடர்ந்து மக்கள் பணியை இன்னும் சிறப்பாக நிறைவேற்ற வெள்ளி விழாவில் சபதம் ஏற்போம்.இன்று ராயபுரம் சட்ட மன்ற தொகுதியில் சுமார் 250 இடங்களில் கட்சிக் கொடி ஏற்றப்படுகிறது. இதேபோல் 16 தொகுதியிலும் தொடர்ந்து விழாக்கள் நடைபெறும். நாளை ஆர்.கே.நகரில் நடக்கிறது. 1–ந்தேதி சைதாப்பேட்டையில் நிறைவு பெறுகிறது. அனைத்து தொகுதிகளிலும் வருகிற 1–ந்தேதிக்குள் 2500 இடங்களில் கொடி ஏற்றப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்