முக்கிய செய்திகள்:
காமராஜர் சிலை அடுத்த மாதம் திறப்பு : ஞானதேசிகன்

காமராஜரின் 112–வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சத்தியமூர்த்தி பவனில் அவரது உருவ படத்துக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் ஞானதேசின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர் ஞானதேசின் கூறியதாவது:–

நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர் காமராஜர். அவரது பிறந்த இன்று தமிழகம் முழுவதும் எழுச்சி யோடும், மகிழ்ச்சியோடும் கொண்டாடப்படுகிறது. காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவனை கட்டியவரும் அவர்தான்.

தேனாம்பேட்டையில் காங்கிரஸ் மைதானத்தை வாங்கி தந்தவரும் அவர்தான்.அவரது நினைவை போற்றும் வகையில் சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் காமராஜரின் முழுஉருவ வெண்கல சிலை அமைக்கப்படுகிறது. அவரது குருவான சத்தியமூர்த்தியின் மார்பளவு சிலையும் அமைக்கப்படுகிறது. இந்த சிலைகள் அடுத்த மாதம் 2–வது வாரம் திறக்கப்படும்.

தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்ததற்கு உழைப்பு இல்லாததுதான் என்று சொல்ல முடியாது. உழைப்புக்கும், வாக்குக்கும் சம்பந்தம் இல்லை. வாக்குகளை கொண்டு சேர்க்க உழைப்பு வேண்டும்.அதே நேரத்தில் ஆட்சியில் செயல்பாடுகளையும், திட்டங்களையும் மதிப்பிட்டுதான் மக்கள் வாக்களிக்கிறார்கள். 10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியை மக்கள் அகற்றினார்கள். மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் மோடியை அமர்த்தினார்கள். அந்த எதிர்ப்பார்பை அவர்களால் நிறைவேற்ற முடியாது. எந்த பிரச்சினையும் பாரதீய ஜனதா அரசு தீர்க்காது. இதன் தாக்கம் அடுத்த தேர்தலில் தெரியவரும்.

வேட்டி என்பது கவுரமான உடை. வேட்டி அணிவதா? பேண்ட் அணிவதா? என்பது பிரச்சினை அல்ல. ஆனால், வேட்டி அணிந்து வருபவர்களை அனுமதிக்க மாட்டோம் என்பதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.நாளை பெண்கள் சேலை அணியக்கூடாது என்ற விதியை கொண்டு வந்தால் நிலைமை என்னவாகும். எனவே இந்த விதிமுறையை மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்