முக்கிய செய்திகள்:
சரத்குமார் மணி விழா

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரின் 60–வது மணிவிழா இன்று கொண்டாடப்பட்டது. தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். மணி விழாவையொட்டி இன்று காலை கொட்டிவாக்கத்தில் உள்ள வீட்டில் சிறப்பு யாகம் நடந்தது. சரத்குமாரும், ராதிகாவும் பங்கேற்று வழிபாடு நடத்தினார்கள். பலர் மணிவிழாவில் பங்கேற்று அவர்களிடம் ஆசி பெற்றனர்.

தினத்தந்தி அதிபர் சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன், நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி, ராம்கி, நடிகை நிரோஷா, சமத்துவ மக்கள் கட்சி துணைத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், பொதுச் செயலாளர் கருநாகராஜன், கொள்கை பரப்பு செயலாளர் ஜெயப்பிரகாஷ், பொருளாளர் சுந்தரேசன், முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட பலர் நேரில் பங்கேற்றனர்.

முன்னாள் மத்திய மந்திரி ஜி.கே.வாசன், லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர், ஜே.எம்.ஆரூண், நடிகர் சத்யராஜ் ஆகியோர் போனில் வாழ்த்து கூறினர்.சரத்குமார் பிறந்த நாளை சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்கள் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினார்கள்.

மத்திய சென்னை கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி சார்பில் எழும்பூர், திரு.வி.க நகர் மற்றும் வில்லிவாக்கம் பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடந்தது. நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. மாவட்ட செயலாளர்கள் சென்னை சி.ராஜா, எழும்பூர் எஸ்.பிரசாத் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்கள்.

நிர்வாகிகள் புரசை டி.நாகப்பன் எம்.பி., முத்துராஜ், டி.எஸ்.கே. பாரதி, டி.எம்.மகேஷ், புல்லட் ராஜேஷ், பாவேந்தன், ஐ.சி.எப். வேல்முருகன், எம்.சரவணன், சி.தீனா, ஏ.சரத், வெங்கடேஷ், ஜே.கே.மணிமாறன், டி.மாணிக்கம், ஆர்.ஜோசப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்